ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:
கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, வரும் 15-ம் தேதி வரை அனைத்து சமய விழாக்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும், நீர் நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கும் அனுமதி இல்லை.
தனிநபர்கள் தங்களது இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாகச் சென்று அருகிலுள்ள நீர் நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுகிறது. தனி நபர்களைத் தவிர, அமைப்புகளுக்கு இச்செயலில் ஈடுபட தடை செய்யப்படுகிறது.
தனி நபர்கள், தங்களது இல்லங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை ஆலயங்களின் வெளிப்புறத்திலோ, சுற்றுப்புறத்திலோ வைத்துச் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இச்சிலைகளை முறையாக அகற்றுவதற்கு இந்து சமய அறிலையத் துறையால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த வழிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். கூட்டத்தில் எஸ்பி ஏ.சசிமோகன், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் பங் கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago