தஞ்சாவூர் மாவட்ட ரயில் பயணிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் அய்யனாபுரம் சி.முருகேசன் தலைமையில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் கோ.அன்பரசன், காங்கேயம் பட்டி ஊராட்சித் தலைவர் ராஜா, வழக்கறிஞர் மணிகண் டன், ஆசிரியர் ஞானசம்பந்தம், விண்ணணூர்பட்டி சங்கர், ஆனந்தன் ஆகியோர் கிராம மக்கள் சார்பில் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் மணிஷ் அகர்வாலிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
மனுவில், “தஞ்சாவூர் மாவட்டம் அய்யனாபுரத்தில் உள்ள ரயில்நிலையம் 100 ஆண்டுகள் பழமையானது. இதைச் சுற்றி 20 குக்கிராமங்கள் உள்ளன. இந்த ஊர்களில் பேருந்து போக்குவரத்து இல்லை. குக்கிராமங்கில் உள்ள பொதுமக்கள் போக்கு வரத்துக்கு ரயிலை மட்டுமே நம்பி உள்ளனர். எனவே, தற் போது திருச்சியில் இருந்து காரைக்கால் வரை இயக் கப்படும் ரயில் அய்யனாபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள் ளனர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கோட்ட மேலாளர் உறுதி அளித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago