கரோனா விதிமுறைகளை பின்பற்றாததால் - 2 தனியார் பேருந்துகளின் சேவை 15 நாட்களுக்கு முடக்கம் : தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

தஞ்சாவூரில் கரோனா விதிமுறை களை பின்பற்றாமல் இயக்கப்பட்ட 2 தனியார் பேருந்துகளின் சேவையை யும், அவற்றின் ஓட்டுநர்கள், நடத்து நர்களின் உரிமத்தையும் 15 நாட் களுக்கு முடக்கி வைத்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் விதமாக, பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தஞ்சாவூர் கரந்தை பகுதியில் நேற்று முன்தினம் மாலை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூருக்கு வந்த தனியார் பேருந்துகளை நிறுத்தி சோதனை செய்தார். அதில் பயணிகள் முகக்கவசம் அணியாமல் இருந்துள் ளனர். இதுகுறித்து தனியார் பேருந்து ஓட்டுநர்கள் நரசியம்மன், சங்கர், நடத்துநர்கள் விஜயராஜன், மாரிமுத்து ஆகியோரிடம் ஆட்சியர் விசாரித்தார். பின்னர், ஆட்சியர் அந்த 2 தனியார் பேருந்துகளின் சேவை யையும், ஓட்டுநர் மற்றும் நடத்து நர்கள் 4 பேரின் உரிமத்தையும் 15 நாட்களுக்கு முடக்க வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.

ஆட்சியரின் உத்தரவின் பேரில், 2 பேருந்துகளும் பறிமுதல் செய் யப்பட்டு, தஞ்சாவூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல, ஓட்டுநர், நடத்துநர்கள் 4 பேரின் உரிமமும் 15 நாட்களுக்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர் விஜய குமார் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்