கரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்ததை தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் உள்ள 11 கலை மற்றும் அறிவியல் கல் லூரிகள், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. 18 வயதுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே அவர்கள் கல்லூரிகளுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அரசு தரப்பில் ஏற்கெனவே தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போட்டுள்ள கல்லூரி மாணவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தியபோது, 50 சதவீதம் மாணவ, மாணவிகள் தடுப்பூசி செலுத்தியுள்ளது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, தடுப்பூசி போடாமல் கல்லூரிக்கு வரும் மாணவ, மாணவிகள் கண்டறியப் பட்டு, அவர்கள் அனைவருக்கும் கல்லூரிகளில் சிறப்பு முகாம் நடத்தி அதன் மூலம் கரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடு களை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
அதன்படி, வேலூர் மாவட் டத்தில் உள்ள 11 அரசு கலைக்கல் லூரிகளில் இன்று (செப்-2) முதல் தடுப்பூசி போடுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. முன்னதாக மாதனூர் ஒன்றியம், அகரம் பகுதியில் உள்ள டாக்டர். எம்ஜிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சேர்க்காடு பகுதியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, கல்லூரி மாணவர்கள் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதில், தடுப்பூசி போட்டுக் கொள்ளாத மாணவ, மாணவி களுக்கு நேற்று தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து அனைத்து கலைக்கல்லூரிகள், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி களில் பயிலும் மாணவ, மாணவி களுக்கு இன்று முதல் கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 100 சதவீதம் மாணவ, மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி போட முடியும் என்றும், கரோனா தொற்றிலிருந்து மாணவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளமுடியும் என்பதால் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என்பதால் அனைத்து மாணவர்களும், கட்டாயம் தடுப் பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago