முந்திரி வியாபாரியிடம் பணம் மோசடி: 2 பேர் கைது :

By செய்திப்பிரிவு

வானூர் அருகே முந்திரி வியாபாரி யிடம் பணம் மோசடி செய்த 2 பேரை போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

வானூர் அருகே இடையன்சாவடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராதா கிருஷ்ணன் (42), முந்திரி கொள் முதல் செய்து வியாபாரம் செய்துவந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் தேதி ஈரோடு மாவட் டத்தைச் சேர்ந்த விஜயகுமார், கோவிந்தராஜ் ஆகியோர் ராதா கிருஷ்ணனை சந்தித்து உயர் ரகத்தில் ஒரு டன்னும், சாதாரண ரகத்தில் 185 கிலோ முந்திரி பருப் புகளை வாங்கிக்கொண்டு மொத்த தொகையான ரூ.6.50 லட்சத்திற்கு ரொக்கமாக ரூ.1 லட்சத்தை கொடுத்துவிட்டு, ரூ.3.97 லட்சத்துக்கு காசோலை கொடுத்துள்ளனர். மேலும் ராதாகிருஷ்ணன் வங்கிக் கணக்கிற்கு ரூ.1.53 லட்சம் பணம் அனுப்புவதாக கூறி முந்திரி மூட்டை களை கொண்டு சென்றனர்.

ஆனால் கொடுக்கப்பட்ட காசோலை பணமில்லாமல் திரும்பிவிட்டது. வங்கிக்கணக்கில் செலுத்து வதாக சொன்ன தொகையையும் கொடுக்கவில்லை. இதுபற்றி விஜயகுமார், கோவிந்தராஜ் ஆகியோரிடம் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாக, விழுப்புரம் எஸ்பி நாதாவிடம் ராதாகிருஷ்ணன் புகார் அளித்தார்.

இப்புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்து, ஈரோடு மாவட்டம் மூலப் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (39), சூரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (42) ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் இருவரை யும் வானூர் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின்பேரில் வேடம்பட்டு சிறையிலடைத்தனர்.

ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்பவர்கள், தாங்கள் வர்த்தகம்செய்யும் நிறுவனம் உண்மையானது தானா? என விசாரித்து வியாபாரம் செய்ய வேண்டும் எனவும், போலி யான நிறுவனம் என தெரிந்தால் உடனே காவல்துறைக்கு தகவல்தெரிவிக்குமாறும் மாவட்ட காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்