திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு வெளியிட்டார். மாவட்டத்தில் மொத்தம் 6,73,867 வாக்களர்கள் உள்ளனர்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இத்தேர்தலுக்கான முன்னேற்பாடு பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியர் வெளியிட்டார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி பெற்றுக்கொண்டார்.
மாவட்டத்தில் 204 கிராம ஊராட்சிகளில் அமைந்துள்ள 1,731 கிராமஊராட்சி வார்டுகளுக்கு வாக்காளர்களை வார்டு வாரியாக, தெரு வாரியாக கண்டறிந்து இணையதளம் மூலமாக வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதன்படி மாவட்டத்தில் கிராம ஊராட்சியில் 1,731 வார்டுகளில் 6,73,867 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3,30,487 பேர்,பெண் வாக்காளர்கள் 3,43,324 பேர்,மூன்றாம் பாலின வாக்காளர்கள் 56 பேர். உள்ளாட்சி தேர்தலுக்காக மாவட்டத்தில் மொத்தம் 1,188 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வாக்காளர் பட்டியலின் நகல் மாநில தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வரும் 3-ம் தேதி வழங்கப்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு, தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் நேற்று வெளியிடப்பட்டது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 3 லட்சத்து 69 ஆயிரத்து 439 ஆண் வாக்காளர்கள், 3 லட்சத்து 85 ஆயிரத்து 939 பெண் வாக்காளர்கள், 24 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 7 லட்சத்து 55 ஆயிரத்து 402 வாக்காளர்கள் உள்ளனர்.தென்காசி மாவட்டத்தில் 1,905 கிராம ஊராட்சி உறுப்பினர்கள், 221 ஊராட்சிமன்ற தலைவர்கள், 144 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் மற்றும் 14 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 1,328 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன.
மாவட்டத்திலுள்ள 9 ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம்:தொகுதி ஆண்கள் பெண்கள் இதரர் மொத்தம்அம்பாசமுத்திரம் 22,006 23,600 1 45,607சேரன்மகாதேவி 13,859 14,344 -28,203களக்காடு 22,781 23,471 1 46,253மானூர் 64,447 68,168 36 1,32,651நாங்குநேரி 40,500 41,504 2 82,006பாளையங்கோட்டை 47,253 48,890 4 96,147பாப்பாகுடி 22,200 23,231 2 45,433ராதாபுரம் 48,639 49,914 4 98,557வள்ளியூர் 48,802 50,202 6 99,010
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago