சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது :

By செய்திப்பிரிவு

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் சட்டப்பேரவை அதிமுக எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் மறியலில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்டனர். இதையடுத்துதமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் அதிமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் அதிமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். அதிமுகஅமைப்பு செயலாளர் சுதாபரமசிவம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். இந்தபோராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 100 அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி

சங்கரன்கோவில் பேருந்து நிலையம் முன்பு அதிமுகவினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கண்ணன், நகர பொருளாளர் வேல்ச்சாமி, மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதேபோல், தென்காசி பழைய பேருந்து நிலையம் அருகில்முன்னாள் எம்எல்ஏ செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமையில், அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் அதிமுகவினர் டூவிபுரத்தில் இருந்து ஊர்வலமாகச் சென்று காமராஜ் காய்கறி சந்தை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் செய்த 6 பெண்கள் உட்பட 75 பேரை போலீஸார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். திருச்செந்தூர் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமைவகித்தார். உடன்குடி பஜாரில் அதிமுக ஒன்றியச் செயலாளர் தாமோதரன் தலைமையில் மறியல் செய்த 15 பேர் கைது செய்யப்பட்டனர். .

கோவில்பட்டி

கோவில்பட்டியில் அதிமுக நகர அலுவலகம் முன்பு நகரச் செயலாளர் விஜயபாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

நாகர்கோவில்

நாகர்கோவிலில் வேப்பமூடு பூங்கா முன்பு அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் அசோகன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால் உட்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்