பெரம்பலூர் மாவட்டம் திருப்பெயர் கிராமத்தில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் நாளொன்றுக்கு சுமார் 2 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
இங்கு தலைவர், செயலாளர், பால் அளவீடு செய்பவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் இருப்பதாகவும், இச்சங்கத்தில் பால் கொள்முதல் செய்வதிலும், வரவு செலவு கணக்கை பராமரிப்பதிலும் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும் கூறி, திருப்பெயர் கிராமத்தைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று பால் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஆவின் மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago