கரூர், அரியலூர் மாவட்டங்களில் காலியாக உள்ள - உள்ளாட்சி பதவியிடங்களுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு :

By செய்திப்பிரிவு

கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 15 உள்ளாட்சி பதவியிடங்களுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியலை ஆட்சியர் த.பிரபுசங்கர் வெளியிட்டார். இதில்மொத்தம் 44,326 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சியில் 8-வது வார்டு உறுப்பினர், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் 8-வது வார்டு உறுப்பினர், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி சித்தலவாய் ஊராட்சித் தலைவர் மற்றும் 11 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன.

இவற்றுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் த.பிரபுசங்கர் வெளியிட, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம் பெற்றுக்கொண்டார். இந்த 15 இடங்களிலும் மொத்தம் 21,261 ஆண்கள், 23,061 பெண்கள், 4 இதரர் என மொத்தம் 44,326 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்,

அரியலூர் மாவட்டத்தில்...

அரியலூர் மாவட்டத்தில் ஆண்டிமடம் ஒன்றியம் ஓலையூர், தா.பழூர் ஒன்றியம் நாயகனைப்பிரியாள், மணகெதி ஆகிய ஊராட்சித் தலைவர் பதவியிடங்களும் மற்றும் 13 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும் காலியாக உள்ளன. இவற்றுக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர்கள் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி நேற்று வெளியிட்டார். அதன்படி, தேர்தல்களில் அரியலூர் மாவட்டத்தில் 6,477 ஆண் வாக்காளர்கள், 6,471 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 12,948 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்