கல்லூரிக்கு வ.உ.சி. பெயர் சூட்ட வலியுறுத்தல் :

By செய்திப்பிரிவு

`திருநெல்வேலியில் அமையவுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வ.உ.சி. பெயர் சூட்ட வேண்டும்’ என்று, தமிழ்நாடு சைவ வேளாளர் இளைஞர் பேரவை வலியுறுத்தியுள்ளது.

திருநெல்வேலியில் வ.உ.சி.யின் 150-வது பிறந்த நாள் விழா மற்றும் சைவ சமுதாய ஒற்றுமைக்கான கல்வி வளர்ச்சி குழு அமைப்பதற்கான கூட்டம் நடைபெற்றது. சைவ வேளாளர் இளைஞர் பேரவை மாவட்டத் தலைவர் ப. மாரியப்பன்பிள்ளை தலைமை வகித்தார்.

மாவட்டச் செயலாளர் செந்தில், சைவ வேளாளர் பேரவை கிளைத்தலைவர்கள் என்ஜிஓ காலனி லட்சுமணன், வீரவநல்லூர் கணேசன், மகாராஜநகர் மணி, சுத்தமல்லி சண்முகசுந்தரம், டிரைவர்ஸ் காலனி சாமி நல்லபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மானூரில் அமைய உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வ.உ.சி.யின் பெயரை சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட பொருளாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்