தனியார் மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளிடம் இருந்து - கரும்பு நிலுவை தொகையை பெற்றுத்தர வேண்டும் : தி.மலை மாவட்ட ஆட்சியருக்கு விவசாயிகள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

தனியார் மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் உள்ள கரும்பு நிலுவைத் தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியருக்கு, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தி.மலை மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது. ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்தார். காணொலி மூலம் விவசாயிகள் பேசும்போது, “தி.மலை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை மற்றும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். வட கிழக்கு பருவ மழை தொடங்கு வதற்கு முன்பாக ஏரி மற்றும் நீர்வரத்துக் கால்வாய்களை தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க் கடன் மற்றும் தனி நபர் நகைக் கடன் வழங்க வேண்டும். இலவச மின் இணைப்பு கேட்டு மனு அளித்துள்ள விவசாயிகள் அனைவருக்கும் இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும்.

தனியார் மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் கரும்புகொள்முதல் நிலுவைத் தொகையை பெற்று கொடுக்க வேண்டும். கால்நடைகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், கூடுதலாக கால்நடை மருத்துவமனையை அமைக்க வேண்டும். கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வருவாய்த் துறை மூலம் யூடிஆர் பட்டா மாறுதலை விரைவாக முடிக்க வேண்டும்” என வலியுறுத்தினர்.

இதில், மாவட்ட வருவாய்அலுவலர் முத்துகுமாரசாமி, வேளாண்மை இணை இயக்குநர் முருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்