பிரஸ் கவுன்சில் அமைப்பது தொடர்பாக முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவு : செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்

பிரஸ் கவுன்சில் அமைப்பது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என்று, செய்தித் துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் தெரிவித்தார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம், திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், திருப்பூர், ஈரோடு, கோவை, பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர்கள் சுப்பராயன், கணேசமூர்த்தி, பி.ஆர். நடராஜன், சண்முகசுந்தரம், மாவட்ட ஆட்சியர் சு.வினீத் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறும்போது, "மத்திய அரசு என்னென்ன திட்டங்களை கொண்டு வந்துள்ளது, எவற்றை செயல்படுத்தி உள்ளது என்பது குறித்த விவரங்களை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தகவல் பலகைகள் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் விதமாக, இயற்கை சீற்றத்தால் சேதமடையும் பயிர்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்தை வரைமுறைப்படுத்த வேண்டும். விவசாயிகளிடம் இருந்து தேங்காய் பருப்பாக அரசு கொள்முதல் செய்வதால், விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, உரித்த தேங்காயை விவசாயிகளிடமிருந்து அரசு கொள்முதல் செய்ய வேண்டும்்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE