குமாரபாளையத்தில் பொதுக்கழிப்பிடங்கள் இரவில் பூட்டப்படும் என அறிவிப்பு :

குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடங்கள் இரவு வேளையில் ஆட்கள் இல்லாததை உறுதி செய்த பின்னர் பூட்டப்படும், என நகராட்சி ஆணையர் ஸ்டான்லிபாபு தெரிவித்தார்.

குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 56 பொதுக் கழிப்பிடங்கள் உள்ளன. இதில், கம்பன் நகர் பொதுக்கழிப்பிடத்தில் நேற்று முன்தினம் ஒரு ஆண் சடலம் கிடந்தது. இதனை காவல் துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நகராட்சிக்கு உட்பட்ட கழிப்பிடங்கள் சரிவர தூய்மை செய்யப்படுவதில்லை என நகர மக்கள் புகார் எழுப்பியுள்ளனர். இதுகுறித்து நகராட்சி ஆணையர் ஸ்டான்லிபாபு கூறுகையில், குமாரபாளையத்தில் 56 பொதுக்கழிப்பிடங்கள் உள்ளன. இவற்றை நகராட்சி தூய்மைப் பனியாளர்கள் நாள்தோறும் தூய்மை செய்து வருகின்றனர்.

தூய்மை பணி மேற்கொள்ளும்போது கழிவறை யில் ஆட்கள் இருந்தால் அந்த அறை தூய்மை செய்யப்படாமல் இருக்க வாய்ப்புண்டு. இனி ஆட்கள் உள்ளிருந்து வெளியேறிய பின்னர் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும். மேலும் நாள்தோறும் இரவில் ஆட்கள் இல்லாததை உறுதி செய்த பின்னர் கழிப்பிடம் பூட்டப்படும், என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE