கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 லட்சத்து 77 ஆயிரம் பேருக்குகரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் தெரிவித் துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்கரோனா 2-ம் அலை பரவலைமுற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மாவட்டத்திலுள்ள 45 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 4 அரசு மருத்துவமனைகள், அரசு தலைமை மருத்துவமனை, சிறப்பு முகாம்கள் வாயிலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
9,564 நபருக்கு தடுப்பூசி
நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்கள் உட்பட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியின் காரணமாக மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால், நேற்று முன்தினம் மட்டும் 9,564 நபருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
போதியளவு கையிருப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல் தவணை 3,77,429-ம், 2-ம் தவணை 69,354 என மொத்தம் இதுவரை 4,46,783 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் கோவிஷீல்டு 9,980, கோவாக்சின் 4,400என போதியளவு கையிருப்பில் உள்ளது என ஆட்சியர் பி.என்.தர் தெரிவித் துள்ளார்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago