கிருஷ்ணகிரியில் ஆதிதிராவிடர் பல்தொழில்நுட்ப கல்லூரி மாணவர் விடுதியை, சென்னையில் இருந்து காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலை, போகனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஹோட்டல் தமிழ்நாடு அருகே ரூ. 1 கோடியே, 26 லட்சத்து, 9 ஆயிரம் மதிப்பீட்டில் நபார்டு வங்கி உதவியுடன் ஆதிதிராவிடர் நல பல்தொழில்நுட்ப மாணவர்களுக்கான விடுதி கட்டப்பட்டுள்ளது. மூன்று தளங்களில், மொத்தம், 569.63. சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள விடுதியை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். விடுதியில், 50 மாணவர்கள் தங்கும் வசதியுடன், காப்பாளர் அறை, உணவுக்கூடம், நவீன கழிப்பறை, சோலார் மின் வசதி உள்ளிட்ட வசதிகளும் செய்யப் பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி டிஆர்ஓ., சதீஷ் தலைமை வகித்தார். வேலூர் மண்டல தாட்கோ செயற்பொறியாளர் இமாம் காசிம் முன்னிலை வகித்தார். மண்டல உதவி செயற்பொறியாளர் கண்ணன், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் கோபு, மாவட்ட மேலாளர் யுவராஜ், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago