ஈரோடு குரங்கன் ஓடையின் குறுக்கே 3 இடங்களில் தடுப்பணை : சிறு, குறு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

By செய்திப்பிரிவு

ஈரோடு குரங்கன் ஓடையின் குறுக்கே மூன்று இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும், என தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, சங்கத்தின் மாநிலத் தலைவர் சுதந்திரராசு, ஈரோடு ஆட்சியரிடம் அளித்துள்ள மனு விவரம்:

கீழ்பவானி வாய்க்காலில் நசியனூர் அருகே ஏற்பட்ட உடைப் புக்கு காரணமான ஒப்பந்ததாரர் மற்றும்பொதுப்பணித்துறை அதி காரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் மீண்டும் பயிர்கடன் வழங்க வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தை ஊரக வளர்ச்சித்துறையில் இருந்து மாற்றி, வேளாண்மைத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். வேளாண் பணிகளுக்கு இத்தொழிலாளர்களை பயன் படுத்த அனுமதிக்க வேண்டும்.

மரவள்ளிக்கிழங்கில் இருந்து எத்தனால் எடுக்கும் தொழிற் சாலையை ஈரோடு அல்லது நாமக்கல் மாவட்டத்தில் அமைக்க வேண்டும். மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டத்தில் செல்லும் குரங்கன் ஓடையின் குறுக்கே 3 இடங்களில் தடுப்பனை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்