ஆந்திராவில் இருந்து செங்கல்பட்டு வந்த ரயிலில் - ரூ.5 லட்சம் மதிப்பிலான 25 கிலோ கஞ்சா கண்டெடுப்பு :

By செய்திப்பிரிவு

ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் இருந்து ‘சிர்கார் எக்ஸ்பிரஸ்' ரயில்செங்கல்பட்டு ரயில் நிலையத்துக்கு வந்தது. ரயிலில் இருந்து அனைத்துபயணிகளும் இறங்கிய பின் யாரேனும் பொருட்களை தவறவிட்டுச் சென்றார்களா என ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் ஆய்வு செய்வது வழக்கம்.

அந்த வகையில், சிர்கார் எக்ஸ்பிரஸ் ரயிலை சோதனை செய்தனர்.அப்போது, ரயில் பெட்டியில் கேட்பாரற்ற வகையில் 4 சூட்கேஸ்கள் இருப்பது தெரியவந்தது. அவையாருடையது என்பது தெரியவில்லை. சந்தேகமடைந்த போலீஸார் அவற்றை திறந்து பார்த்தனர். அதில் 13 பண்டல்களில் 25 கிலோகஞ்சா இருந்தது. அதை ரயில்வேபாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் எனதெரிகிறது. இந்த கஞ்சாவை, கடத்திவந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கைப்பற்றப்பட்ட கஞ்சா, காஞ்சிபுரம் மாவட்ட போதைப் பொருள்நுண்ணறிவுப் பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக, போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து கஞ்சா கடத்திய கும்பலைப் பிடிக்க விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஆந்திராவிலிருந்து வரும் ரயில்களில் தொடர்ந்து கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது. அதாவதுஆந்திராவில் இருந்து வரும் ரயிலில் போலீஸ் கெடுபிடி இல்லாதரயில் நிலையத்தில் கஞ்சா கடத்தல்காரர்கள் கஞ்சாவை குறிப்பிட்டரயில் பெட்டியில் வைத்துவிட்டு,பின்னர், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு போனில் தகவல் தெரிவிப்பார்கள். போலீஸ் பாதுகாப்பு இல்லாதரயில் நிலையங்களில் ரயில் வரும்போது அந்த கும்பல் கஞ்சா இருக்கும் பெட்டியைக் கொண்டு செல்வது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்