விழுப்புரத்தில் கடைகளில் விற்பனை செய்யப்பட்ட 106 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல் செய்யப் பட்டன.
விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சி யர் மோகன் உத்தரவின் பேரில் உணவுப் பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் மருத்துவர் சுகந்தன், மீன்வளத் துறையின் கூடுதல் இயக்குநர் ஜனார்தனன் தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ஸ்டாலின், ராஜேந்திரன், இளங்கோவன், கதிரவன்,மீன்வளத்துறை ஆய்வாளர்சந்திரமணி உள்ளிட்ட குழுவினர் மீன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
விற்பனைக்கு வைக்கப்பட்டமீன்களில் ரசாயனம் கலக்கப்பட்டதா என ஆய்வு மேற் கொண்டது. நாள்பட்ட அழுகிய நிலையில் உள்ள மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இப்படி உணவுக்கு உகந்ததாக இல்லாத 106 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு நகராட்சி ஊழியர்கள் மூலம் பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 45 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago