ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மரக்குளம் ஊராட்சிக்குட்பட்டது சின்ன உடப்பங்குளம்.இக்கிராமத்திலுள்ள மயானத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.14.39 லட்சம் மதிப்பில் கடந்த 10 நாட்களாக சுற்றுச்சுவர் கட்டும் பணி நடக்கிறது.
இந்நிலையில் மயானம் அருகில் உள்ள தனது பட்டா இடத்தில் மயானத்தின் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருவதாகவும், இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என மண்டலமணிக்கம் போலீஸில் கமுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் ஊராட்சி நிர்வாகம் மீது புகார் அளித்துள்ளார். இதனையடுத்து இரு தரப்பினரிடமும் விசாரணை நடைபெற்றது. பின்னர் மயானம் அமைந்திருக்கும் இடத்தை வருவாய்த்துறையினர், காவல்துறையினர் ஆய்வு செய்து, ஒரு வாரத்துக்குள் நிலத்தை அளவீடு செய்து முடிவு எடுக்கப்படும் என்றனர்.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, கண்ணனின் மூதாதையர் சின்ன உடப்பங்குளம் கிராமத்துக்கு மயானம் அமைப்பதற்காக தானமாக வழங்கிய நிலத்தில்தான் சுற்றுச்சுவர் அமைத்து வருகிறோம் என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago