திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் சேவூர் அருகே பாப்பாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட வலையபாளையத்தில், 150ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த சுயம்பு பகவதி அம்மன்கோயில் உள்ளது.
இக்கோயிலில் வலையபாளையம், போலநாயக்கன்பாளையம், சிந்தாமணிப்பாளையம், நட்டுக்கொட்டையான் புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். ஆடி, பங்குனி மாதங்களில் பொங்கல் வைத்து விழா நடத்துவது வழக்கும். மேலும், சேவூர் - கோபி பிரதான சாலையில் அமைந்துள்ளதால், அவ்வழியாக செல்லும் பேருந்து, லாரி, இருசக்கர வாகனங்கள், பனியன் நிறுவனப் பேருந்து ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் காவல் தெய்வமாக வழிபட்டுச் செல்வர். இதேபோல சேவூர், போத்தம்பாளையம் ஆகிய பகுதிகளிலுள்ள வாடகை ஆட்டோ, கார் ஓட்டுநர்கள் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு செய்து வந்தனர். இந்நிலையில், சுற்றுலாசென்றுவிட்டு திருவண்ணாமலையில் இருந்து போத்தம்பாளையம் நோக்கிச் சென்றவேன், எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த பகவதி அம்மன் கோயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், கோயில் முற்றிலும் இடிந்து சேதமானது. சம்பவ இடத்துக்கு சென்று சேவூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.சேவூர் அருகே வலையபாளைத்தில் நேற்று சுற்றுலா வேன் மோதி முற்றிலுமாக சேதமடைந்த பகவதி அம்மன் கோயில்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago