கடலூர் மாவட்டத்தில் குளிர் காற்றுடன் மழை :

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கடலூர், பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி, முஷ்ணம், புவனகிரி, பண்ருட்டி, சிதம்பரம், விருத் தாசலம், அண்ணாமலைநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் திடீரென குளிர்ந்த காற்று வீசியது இதனை தொடர்ந்து பலத்த மழை பெய்தது.

சாலைகளில் மழைத்தண்ணீர் ஓடியது, தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த மழையால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்ட விவசாயிகளின் நெல் மூட்டைகள் நனைத்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கொத்தவாச்சேரியில் 49 மி.மீட் டரும், பரங்கிப்பேட்டையில் 44.60,கடலூரில் 33.10, மாவட்ட ஆட்சியர்அலுவக பகுதியில் 32, குறிஞ்சிப்பாடியில் 32, ஸ்ரீமுஷ்ணத்தில் 24.10, புவனகிரியில் 23 , பண்ருட் டியில் 16, சிதம்பரத்தில் 12.40, அண்ணாமலைநகரில் 10, விருத்தாசலத்தில் 6.20 மி.மீட்டரும் மழை பெய்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்