தலைமை ஆசிரியர்கள் ஆலோசனைக் கூட்டம் :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடியில் தலைமைஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி க.பாலதண்டாயுதபாணி, மாவட்ட கல்வி அதிகாரிகள் சின்னராஜ், வசந்தா, முனியசாமி, முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் சு.அழகுராஜா பங்கேற்றனர்.

9-ம் வகுப்பு முதல் 12-ம்வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், ஒரு வகுப்பில் 20 பேரை மட்டுமே அமர வைக்க வேண்டும்.

வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் இயங்க வேண்டும். விரும்பும் மாணவர்களுக்கு ஆன்லைனில் படிக்க அனுமதி அளிக்க வேண்டும். பள்ளிவளாகத்தில் வெப்பநிலை பரிசோதனை, முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி தெளித்தல், தனிநபர் இடைவெளி ஆகியவற்றை பின்பற்றுதல் வேண்டும். ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். பயோமெட்ரிக் வருகை பதிவேட்டை பயன்படுத்தக்கூடாது. விளையாட்டு, இறைவணக்க கூட்டம், நிகழ்ச்சிகள்நடத்தக்கூடாது என அறி வுறுத்தப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்