மரபுவழி நடைபயணம் :

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சார்பில் கடந்த 1 மாதமாக அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தொல்லியல் ஆர்வலர்கள், வீதி கலை இலக்கியக் களம் மற்றும் சங்கத்தமிழ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் கோட்டை சுவர் மீது மரபுவழி நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. கோட்டையின் சங்ககால வரலாறு குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கரு.ராஜேந்திரன், ஜெ.ராஜாமுகமது, ஆ.மணிகண்டன், வே.ராஜகுரு ஆகியோர் விளக்கினர். முன்னதாக பயணத்தை ஊராட்சித் தலைவர் ராஜாங்கம் தொடங்கி வைத்தார். பின்னர், கோட்டையின் வடக்கு பகுதியில் கவிஞர் நா.முத்துநிலவன் தலைமையில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சியில், தமிழர்களின் சங்ககால வரலாற்று பொக்கிஷமான இவ்விடத்தை வரலாற்று சின்னமாக அறிவித்து, பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE