வரன் தேடும் இணையதளம் மூலம் - இளைஞரிடம் பணம் மோசடி செய்த பெண் கைது :

By செய்திப்பிரிவு

ஹைதராபாத் சாயினிக்பூரி கண்டிகொண்டா பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன்(34). மென்பொருள் பொறியாளரான இவர், திருமணத்துக்காக திருமண வரண்தேடும் இணையதளத்தில் மணப்பெண் தேடியுள்ளார். அந்த இணையதளத்தில் திவ்யா (28) என்ற பெயரில் இடம்பெற்றிருந்த பெண்ணின் புகைப்படத்தை பார்த்து, தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்து தனது செல்போன் எண்ணை கொடுத்துள்ளார். இருவரும் செல்போனில் பேசியுள்ளனர்.

இந்நிலையில் அந்த பெண், தனது தோழிக்கு அவசரமாக பணம்தேவைப்படுகிறது எனக் கேட்டதால், 8.7.2021 மற்றும் 4.8.2021 ஆகிய தேதிகளில் தலா ரூ.40 ஆயிரம் என, ரூ.80 ஆயிரத்தை அந்த பெண் கொடுத்த வங்கிகணக்குக்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் அந்த பெண் வழங்கிய கோவை முகவரியில் அவரைசந்திக்க சென்றபோது, திவ்யாஎன்ற பெயரில் யாருமில்லை என்பது வாசுதேவனுக்கு தெரியவந்தது.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தவாசுதேவன், அந்த பெண் கொடுத்தவங்கி கணக்கு எண் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தது என்பதால், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். விசாரணையில் அந்த வங்கி கணக்கு எண் நாலுமாவடியைச் சேர்ந்த தங்கவேலு மனைவி கீதா (36) என்பவர் பெயரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரை கைது செய்து விசாரித்ததில், திவ்யா என்ற பெயரில்திருமண இணையதளத்தில் வேறொரு பெண்ணின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ததையும், வாசுதேவனை ஏமாற்றி பணம்மோசடி செய்ததையும் ஒப்புக்கொண்டார். இதேபோல 20-க்கும்மேற்பட்டவர்களை ஏமாற்றியுள்ளதும் தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்