திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் அருகில் சாலையோரங்களில் 24 தள்ளுவண்டி உணவகங்கள் செயல்படுகின்றன. இந்த கடைகளை மாநகராட்சி மூலம் தரம் உயர்த்தி நவீனமயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உணவகங்களை மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை செயல்பட வைக்கவும், கடைக்காரர்களுக்கு, உணவு கட்டுப்பாட்டுத்துறை அலுவலர்கள் மூலம் பயிற்சி வழங்கவும், 15 நாட்களுக்கு ஒரு முறை பாரம்பரிய உணவு விற்பனைக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. சுகாதாரமான, தரமான உணவை பொதுமக்களுக்கு வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago