வேலூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் - கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஆசிரியர்களின் விவரங்கள் சேகரிப்பு : வகுப்பறைகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. கரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் வகுப்பில் பங்கேற்க உள்ளனர். இதற்காக, பள்ளிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பள்ளிகள் செயல் படுவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அனைவரும் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். ஒரு வகுப்பறைக்கு 20 மாணவர்கள் வீதம் இயங்க வேண்டும். அதற்கு ஏற்ப பாடப்பிரிவுகளை பிரித்து வகுப்புகள் நடத்த வேண்டும்.

பள்ளிக்கு வரும் மாணவர் களுக்கு தினசரி காய்ச்சல் பரிசோதனை நடத்துவதுடன் கூட்டமாக செல்வதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் அரசு, அரசு நிதியுதவி, மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகள் என மொத்தம் 282 பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இதில், அரசுப் பள்ளிகளில் வகுப்பறை பற்றாக்குறை இருந்தால் சுழற்சி முறையில் மாணவ, மாணவிகளை பள்ளிக்கு வரவழைக்கவுள்ளனர். குறிப்பாக, வகுப்பறை பற்றாக்குறை இருக்கும் பள்ளிகளில் 10-ம்வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு தினசரி கட்டாய வகுப்புகள் நடத்துவதுடன் 9 மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு மட்டும் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும் திட்ட மிட்டுள்ளனர்.

வேலூர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் சுமார் 6 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

எனவே, தடுப்பூசி போட்டவர்களின்பட்டியலை மாவட்ட கல்வித்துறைஅதிகாரிகள் சேகரித்து வருகின்ற னர்.

இது தொடர்பாக அதிகாரிகள்கூறும்போது, ‘‘ஒரு டோஸ் அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் யார் என்பது குறித்தவிவரங்களை சேகரித்து வருகிறோம். மருத்துவர்கள் பரிந்துரையால் தடுப்பூசி போடாவிட்டால் அது தொடர்பான விவரத்தையும் சேகரிக்கிறோம்.

தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் இல்லாமல் இருப்பவர்கள் யாராவது இருந்தால் அவர்கள் அருகில் உள்ள முகாம்களில் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொண்டு அதற்கான சான்றி தழை சமர்ப் பிக்க வேண்டும் என கூறியுள் ளோம்’’ என தெரி வித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்