கரோனா ஊரடங்கு விதிகள் தளர்வால் - ஏலகிரியில் படகு இல்லம் இன்று முதல் திறப்பு : மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தகவல்

By செய்திப்பிரிவு

சுற்றுலாப் பயணிகளுக்காக ஏலகிரி படகு இல்லம், பூங்காக்கள் இன்று முதல் திறக்கப்பட உள்ளதாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலகிரியில் உள்ள இயற்கை பூங்கா மற்றும் படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் கரோனா ஊரடங்கால் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப் பட்டது. தற்போது, சுற்றுலாத்தலங் களுக்கான ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஏலகிரியில் சுற்றுலாப் பயணிகள் மீண்டும் படகு சவாரி செல்லவும், இயற்கை பூங்காக்களை ரசிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏலகிரி இயற்கை பூங்கா உள்ளிட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேற்று ஆய்வு செய்த துடன், அங்கு செய்ய வேண்டிய பணிகளையும் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர், அவர் செய்தி யாளர்களிடம் கூறும்போது, ‘‘கரோனா ஊரடங்கால் ஏலகிரி படகு இல்லம், சிறுவர் பூங்கா, இயற்கை பூங்கா உள்ளிட்டவை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தது.தற்போது, சுற்றுலாப் பயணிகளுக்காக இவை அனைத்தும் திறக்கப்பட உள்ளதால் சுத்தப்படுத்தப் பட்டுள்ளது.

ஏலகிரி படகு இல்லம், சிறுவர் பூங்கா, இயற்கை பூங்கா உள்ளிட் டவை நாளை (இன்று) முதல் திறக்கப்பட உள்ளன. ஏலகிரியில் உள்ள 7 இடங்களில் பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்’’ எனதெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அருண், வட்டார வளர்ச்சி அலுவலர் அருண் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்