‘அவசியமின்றி மூன்று நாட்களுக்கு பொதுமக்கள் வெளியே வரவேண்டாம்’ :

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு.வினீத் கூறும்போது, "சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, திருப்பூர், நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் 28-ம் தேதி (இன்று) இடியுடன் கூடிய கனமழையும் நாளை (ஆக.29), நாளை மறுதினம் ஆகிய 3 நாட்களுக்கு கன மழை முதல் மிக அதிக கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. எனவே, திருப்பூர் மாநகரில் ஜம்மனை பள்ளம், சங்கிலிப் பள்ளம் மற்றும் அமராவதி, நொய்யல் ஆற்றின் கரையோரமுள்ள மக்கள், பாதுகாப்புடனும், விழிப்புடனும் இருக்க வேண்டும்.

எனவே, அவசியமின்றி மக்கள் வெளியில் வர வேண்டாம்.இடி பாதிப்புக்கு உள்ளாகும் உயரமான கட்டிடங்கள் மற்றும்மரங்களின் அருகே நிற்க வேண்டாம். மேலும் மக்களுக்கு உதவும் வகையில் மாவட்ட நிர்வாகத்தால் மீட்பு மற்றும் பேரிடர் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கன மழையால் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானால் கட்டுப்பாட்டு எண் 1077-ஐ தொடர்பு கொள்ளலாம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்