திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் மக்கள் நாடாளுமன்றம் :

By செய்திப்பிரிவு

வேளாண் சட்டங்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்டவற்றுக்கு எதிராக திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் நாடாளுமன்றம் நடைபெற்றது.

மத்திய அரசு வேளாண் சட்டங்கள், மின்சார திருத்த சட்டம்,அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவள்ளூர் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் நாடாளுமன்றம் கடந்த 23-ம் தேதி தொடங்கியது.

திருவள்ளூர், மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, வில்லிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் நடந்து வந்த இந்த மக்கள் நாடாளுமன்றம் நேற்று நிறைவு பெற்றது.

இதில், நேற்று கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்நல்லாத்தூர் ஊராட்சியில் நடந்த மக்கள் நாடாளுமன்ற நிகழ்வில், கட்சியின் மாவட்ட செயலாளர் கஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்