கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள்திறப்பது தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சி யர் பி.என்.தர் தலைமையில் ஆலோசனைக்குழு கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியது:
தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி மாவட்டத்தில் உள்ள 244 பள்ளிகளில் அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். சுகாதாரத் துறையின் சார்பில் பள்ளிக்குவருகை தரும் ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களை வாரம் ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டும். மக்களைத் தேடி மருத்துவக் குழு மூலம் பள்ளி மாணவர்களை தொடர்பு கொண்டு கரோனா நோய்த் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பள்ளி மாணவர்களுக்கு கரோனா நோய்த் தொற்று அறி குறிகள் கண்டறியப்பட்டால் அவர் களை பள்ளிக்கு அனுமதிக்கக் கூடாது. உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வைட்டமின் சி மற்றும் மல்டி வைட்டமின் மாத்திரைகளை மாண வர்களுக்கு வழங்க ஏதுவாக போதுமான அளவு கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.
பள்ளி வளாகம், எழுது பொருட்கள், இருப்பு அறைகள்,குடிநீர்தொட்டிகள், சமையல் அறை, உணவகம், கை கழுவும் இடம், ஆய்வுக்கூடங்கள் மற்றும் நூலகம் உள்ளிட்ட பள்ளியில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் கிருமி நாசினி கொண்டு தினசரி சுத்தம் செய்ய வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட பள்ளிகளில் தேசிய ஊரக வேலை உறுதிய ளிப்புத் திட்டத்தின் கீழ் பணி புரியும் பணியாளர்களைக் கொண்டுபள்ளி வளாகத்தினை தூய்மை யாக வைத்துக்கொள்ள வேண்டும்.
பள்ளிக்கு மாணவர்கள் முகக் கவசத்துடன் வருவதை உறுதி செய்ய வேண்டும். அடிக்கடி கிருமி நாசினி அல்லது சோப்புப் போட்டு மாணவர்கள் கைக்கழுவுவதற்கும், சமூக இடைவெளியை கடை பிடிப்பதற்கும் அறிவுறுத்த வேண் டும்.
வகுப்புகள் முடிவுற்றபின் வகுப்பு வாரியாக சமூக இடைவெளியை பின்பற்றி ஆசிரியர்உதவியுடன் மாணவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைக்கஅனைத்து முன்னேற்பாடு பணிக ளையும் தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago