உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி - மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், கடும் ஊனமுற்றோருக்கு உதவித் தொகை ரூ.5 ஆயிரமாக வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

விருதுநகர்

ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலச் சங்க நிர்வாகி சரவணன், மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணியன், சங்க நிர்வாகி பாக்கியராஜ், ஜனநாயக மாதர் சங்க நகரத் தலைவர் மைதிலி, மார்க்சிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் மாரியப்பன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் அரிஹரசுதன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் நிலர்வேணி, மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் காசிநாததுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முதுகுளத்தூர் தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தாலுகா செயலாளர் முனியசாமி, மார்க்சிஸ்ட் தாலுகா செயலாளர் முருகன்உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ராமேசுவரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தாலுகா செயலாளர் எஸ்.சீனிவாசன் தலைமை வகித்தார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் முழு வதும் 26 இடங்களில் மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். திண்டுக்கல்லில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் செல்வநாயகம் தலைமை வகித்தார். பழநியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பழநி நகர செயலாளர் தங்கவேல், மாவட்டச் செயலாளர் பகத்சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பழைய ஆயக்குடி, பாலசமுத்திரம், கொடைரோடு விளாம்பட்டி, சித்தரேவு உள்ளிட்ட இடங்களிலும் மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்