திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
திண்டுக்கல் ஏ.டி.எஸ்.பி. லாவண்யா தலைமை வகித்தார். டி.எஸ்.பி. இம்மானுவேல், இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்கள் முகாமில் கலந்துகொண்டனர்.
திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. வி.ஆர்.சீனிவாசன் பேசியதாவது: பள்ளிகளில் சைபர் கிளப் தொடங்க வேண்டும். வலைதளங்களில் அனைத்து விஷயங்களும் கிடைக்கிறது. இதில் எதை எடுத்துக்கொள்ள வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்பதை மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்களாகிய நீங்கள் சொல்லித்தர வேண்டும். சைபர் கிளப் வழியாக வலைதளங்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago