புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அளவிலான மாணவர் அரங்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தொடங்கிவைத்து பேசியது:
தமிழக மக்களின் பிரச்சினைகள் குறித்து கட்சியின் எம்எல்ஏக்களின் வாயிலாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும். நாட்டின் விடுதலைக்கான போராட்டங்களில் பங்கேற்காத கட்சி தற்போது இந்தியாவை ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. நாட்டு மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வராமல், நாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களை விற்பனை செய்து வருகிறது. இதுபோன்ற செயல்களை எதிர்க்கவும், எதிர்கொள்ளவும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தயாராக வேண்டும். எங்களை தலைவர்களாக உயர்த்தியது மாணவர் பருவ அரசியல் பயிற்சிதான் என்றார்.
இந்நிகழ்ச்சிக்கு மாநில அரங்க உறுப்பினர் டி.கண்ணன் தலைமை வகித்தார். இதில், மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago