திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை மாநகராட்சி அலுவலர்கள் மீட்க சென்ற நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்ணெண்ணெய் கேனுடன் பொதுமக்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் - கொங்கு பிரதான சாலை பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், பொதுமக்கள் பலர் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இடத்தை மாநகராட்சிக்கு திரும்ப ஒப்படைக்குமாறு, அந்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இடத்தை ஒப்படைக்காமல் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, கொங்கு பிரதான சாலை பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை மீட்க நேற்று காலை போலீஸாருடன் மாநகராட்சி அலுவலர்கள் சென்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், மண்ணெண்ணெய் கேனுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அலுவலர்களும், போலீஸாரும் சமரச பேச்சுவார்த்தை நடத்தியும், அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதால், அனைவரும் கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago