கல்வராயன்மலையை சிறந்த சுற்றுலாதலமாக மாற்ற முடிவு :

By செய்திப்பிரிவு

கல்வராயன் மலைப் பகுதிகளை தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வ ராயன்மலைப் பகுதிகளுக்குட்பட்ட மாவடிப்பட்டு, தாழ்வெள்ளாறு, கரியாலூர், புளுகப்பாடி, வெள்ளிமலை மற்றும் நடுதொர டிப்பட்டுஆகிய கிராமங்களில் பல்வேறுதுறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர் பி.என்.தர் ஆய்வு செய்தார்.

அப்போது கல்வராயன்மலை முகப்பு பகுதியில் கோமுகி அணை முழுவதையும் சுற்றுலா பயணிகள் பார்ப்பதற்கு ஏதுவாக சுற்றுலாத்துறையின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை செய்தார். பின்னர், மாவடிப்பட்டு கிராமத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் ரூ.20,000 மானியத்தில் மிளகு செடி பயிரிடப்பட்டுள்ள விவசாயின் தோட்டத்தை ஆய்வு செய்தார்.

இத்தோட்டத்தில் மகரந்த சேர்க்கை மூலம் தேனீ வளர்ப்பை ஊக்கப்படுத்தும் விதமாக தேன் பெட்டி, தேனீ குடும்பம் மற்றும் தேன் பிழிப்பான் ஆகியவை ரூ.25,000 மானியத்தில் வழங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டார். தோட்டக்கலைப் பயிர்களான மிளகு, காபி, அன்னாசி போன்ற பயிர்கள் பயிரிட இப்பகுதி விவசாயிகளை ஊக்கப்படுத்திட தோட்டக்கலைத் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

கல்வராயன்மலை தாழ்வெள்ளாறு பகுதியில் சுற்றுலாமேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுவது குறித்தும்ஆய்வு செய்தார். இப்பகுதியைதமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கு தேவையான கட்டமைப்புகள், பூங்காக்கள் அமைப்பது போன்ற பணிகள்மேற்கொள்ள சுற்றுலா அலுவலர்மற்றும் தொடர்புடைய அலுவலர் களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், வெள்ளிமலையில் ரூ.4.25 கோடி மதிப்பீட்டில் கல்வராயன்மலை வட்டாட்சியர் அலுவலகம் கட்டுமானப் பணிகளை ஆய்வுசெய்தார்.

கட்டுமானப் பணிகளைவிரைந்து முடித்திட அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது,மகளிர் திட்ட அலுவலர் எஸ்.தேவநாதன், பழங்குடியினர் நல அலுவலர் பிரகாஷ்வேல், மாவட்ட சுற்றுலா அலுவலர் மு.அப்ராஜிதன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்