விழுப்புரம் தபால் நிலைய கொள்ளை வழக்கில் ஈரானை சேர்ந்த இருவர் உட்பட 3 பேர் கைது :

By செய்திப்பிரிவு

விழுப்புரம் தலைமை தபால் நிலையத்தில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

விழுப்புரம் காமராஜர் வீதியில் தலைமை தபால் நிலையத்தில் கடந்த ஜூலை 15-ம் தேதி ரூ.2 ஆயிரத்துக்கு சில்லரை கேட்டு 3 பேர் வந்தனர். அவர்கள், கருவூல ஊழியரின் கவனத்தை திசை திருப்பி ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக, விழுப்புரம் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்துஆட்டோவில் வந்து தபால் நிலையத்தில் கொள்ளையடித்துக் கொண்டு மீண்டும் ஆட்டோவில் தப்பியோடியது தெரியவந்தது. பின்னர், விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கார் மூலமாக தப்பிச் சென்றதும் தெரியவந்தது. போலீஸார் கார் எண்ணை வைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.இந்நிலையில், சென்னையில் திருட்டு வழக்கு ஒன்றில் சிக்கிய ஒரு கும்பலிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, விழுப்புரம் தலைமை தபால் நிலையத்தில் கொள்ளை சம்பவத்தில் அவர்கள் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. விசாரணையில், அவர்கள் ஈரான் நாட்டைச் சேர்ந்த ஷியாவல்(20), ரோஸ்டம் சையிதி(28) மற்றும் டெல்லி நிஜாமுதீனைச் சேர்ந்த ரகுமான் யூனஸ் அலிபனா(56) ஆகியோர் என்று தெரியவந்தது. அவர்கள் 3 பேரும் சென்னை போலீஸாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து,விழுப்புரம் தலைமை தபால் நிலைய கொள்ளை வழக்கில் ஷியாவல்,ரோஸ்டம்சையிதி மற்றும் யூனஸ் அலிபனா ஆகியோரை விழுப்புரம் நகர போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்