அரசு பணியாளர்களை கொச் சைப்படுத்துவதை முதல்வர் தடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ப.குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிவகங்கையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி, அகவிலைப்படி ரத்தை மேலும் 9 மாதங்களுக்கு நீட்டித்திருப்பது அரசு பணியாளர், ஆசிரியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அரசு மறுபரிசீலனை செய்ய வலியுறுத்துகிறோம்.
இந்நிலையில் நிதியமைச்சர் அகவிலைப்படி ரத்தை நியாயப்படுத்தியும், பணியாளர்களை கொச்சைப்படுத்தியும் பேசியுள்ளார். அவர் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தினால் அரசு திவாலாகி விடும் எனக் கூறுவது வேதனை தருகிறது. சமீபத்தில் நிதிநிலை அறிக்கையில் அரசுப் பணியாளர்கள் ஊதியம், ஓய்வூதியத்துக்கு 27 சதவீதம் செலவாகிறது எனக் கூறிவிட்டு, பழைய ஓய்வூதியத்தை வழங்கினால் அரசு நிதி 100 சதவீதம் செலவாகிவிடும் என அமைச்சர் தெரிவித்திருப்பது முரண்பாடானது.
மத்திய அரசு அலுவலர்களுக்கு அக விலைப்படியைப் தொடர்ந்து கொடுக்கும்போது, தமிழக பணியாளர்களை கொச்சைப் படுத்த வேண்டிய அவசியம் என்ன? பழைய ஓய்வூதியத் திட்டம் போன்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல்களை வெளிப்படுத்தலாம். அதை விடுத்து ஓய்வூதியத் திட்டம் குறித்த தேர்தல் வாக்குறு திகளையே கொச்சைப்படுத்துவது எப்படி சரியாகும்? இதுபோன்ற அணுகுமுறை அரசுக்கு அவப் பெயரை உண்டாக்கும். இதனை முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago