ஈரோடு அரசு அருங்காட்சியகம் சார்பில், சுதந்திர தினத்தையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ஈரோடு அரசு அருங்காட்சி யகம் சார்பில், சுதந்திர தினத்தை யொட்டி, தேசியக் கொடியை சிறப்பிக்கும் வகையில், மூவர்ண காகித கைவினைப் பொருட்கள் செய்யும் போட்டி நடத்தப்பட்டது. பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 200 மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர். மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான மூவர்ண காகித கைவினைப் பொருட்கள் அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வரும் 31-ம் தேதி வரை வைக்கப்பட்டுள்ளது.
இப்போட்டிகளில் செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி மாணவி சந்தியா, மாணவர் வஜ்ரவேல், கலைமகள் கல்வி நிலைய மாணவி ரம்யா, சின்னசேமூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி நிவேதா, கொங்கு வெள்ளாளர் பள்ளி மாணவர் நவாயுகன், மேரீஸ் உயர்நிலைப்பள்ளி மாணவர் நிரஞ்சன் ஆகிய ஆறு பேர் முதல்பரிசு பெற்றனர். போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அருங்காட்சியக காப்பாட்சியர் ஜென்சி செய்திருந்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago