தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள ஜெயராஜ் சாலையை ஸ்மார்ட்சாலையாக மாற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.சாலையில் ஒரு பகுதியில் பணிகள்முடிவடைந்ததால் கடந்த சிலநாட்களாக மீண்டும் பேருந்துகள்அந்த வழியாக இயக்கப்பட்டு வந்தன. ஸ்மார்ட் சாலை மிகவும்உயரமாக அமைக்கப்பட்டுள்ளதால் மணல் மூலம் சாய்வுதளம் அமைக்கப்பட்டு அந்த வழியாக பேருந்துகள் இயக்கப்பட்டன.
நேற்று காலை 11 மணியளவில் ஜெயராஜ் சாலையில் போடப்பட்டிருந்த சாய்வுதளத்தை ஒப்பந்த பணியாளர்கள் திடீரென அகற்றினர். இதனால் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் பேருந்துகள் ஜெயராஜ் சாலைக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டது.
ஜெயராஜ் சாலை பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் ஆட்டோ ஓட்டுநர்களும், அச்சாலையை ஒட்டி கடைகள் வைத்துள்ள வியாபாரிகளும் தங்கள் தொழில் பாதிக்கப்படுவதாக கூறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல் ஆய்வாளர் மயிலேறும்பெருமாள் மற்றும் போலீஸார்அங்கு வந்து பேச்சுவார்த்தைநடத்தினர். ஜெயராஜ் சாலையில்பணி முடிக்கப்பட்ட பகுதி வழியாக பேருந்துகளை அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் தற்காலிக பேருந்து நிலையத்தில் சுமார் அரை மணி நேரம் பரபரப்பு நிலவியது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago