உரிய அனுமதியில்லாமல் திருப்பூரில் தங்கியிருந்த வங்க தேசத்தைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் செட்டிபாளையத்தில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் அஷிஜூல் இஸ்லாம் (29). இவர், திருப்பூரில் தங்கி பணியாற்றி வந்தார். நேற்று நடைபெற்ற வாகன சோதனையின்போது, அவரிடம் ஓட்டுநர் உரிமத்தை 15 வேலம்பாளையம் போலீஸார் கேட்டுள்ளனர். அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லாததால், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் உள்ளிட்டவற்றை கேட்டுள்ளனர். அவரிடம் எவ்வித ஆவணங்களும் இல்லாததால், போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. விசாரணையில், அவர் வங்கதேச நாட்டை சேர்ந்தவர் என்பது உறுதியானது. அவரை போலீஸார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்படி, வங்கதேச நாட்டைச் சேர்ந்த மற்றொரு நபரான முஜூபுர் ரஹ்மான் (28) என்பரையும் போலீஸார் கைது செய்தனர். இருவர் மீதும் வெளிநாட்டு வாழ் தடைச்சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குபதிந்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago