நாச்சிக்குப்பம் கிராமத்தில் - கோழிப் பண்ணைகள் அமைக்க எதிர்ப்பு வேப்பனப்பள்ளி பிடிஓ அலுவலகம் முற்றுகை :

By செய்திப்பிரிவு

நாச்சிகுப்பம் கிராமத்தைச் சுற்றி 8-க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் அமைக்கப்படுவதை கண்டித்து 10 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் நாச்சி குப்பம் கிராமத்தில் ஏற்கெனவே உள்ள கோழிப்பண்ணையால் கிராம மக்கள் அவதியுற்று வருகின்றனர். இந்நிலையில், இக் கிராமத்தைச் சுற்றி 8 கோழிப் பண்ணைகள் அமைக்கும் பணியில் தனியார் ஈடுபட்டு வருகின்றனர். இதனை எதிர்த்து பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாததால், 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடாந்து கிருஷ்ணகிரி வட்டாட்சியர் பிரதாப் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சென்னகிருஷ்ணன், பாலாஜி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரி கள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் கோழிப் பண்ணைகளின் கட்டுமானப்பணிகள் நிறுத்தப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட் டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்