சிதம்பரம் நேரு நகர், அம் பேத்கர் நகரில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக 164 குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் வருவாய்த் துறையினர் அந்த இடம் நீர்வழி ஆக்கிரமிப்பு கூறி அளவீடு செய்தனர். நேற்று முன்தினம் அப்பகுதிகளில் உள்ள வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் வழங்க அந்த பகுதிக்கு சென்றுள்ளனர். அப்பகுதிமக்கள் எதிர்ப்பு தெரிவித்து நோட்டீசை வாங்க மறுத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் முத்து தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு முன்னி லையில் அப்பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிதம்பரம் சார்- ஆட்சியர் மதுபாலனிடம் மனு அளித்தனர். மாற்று இடம் வழங்கிய பிறகு எங்களது வீடுகளை காலி செய்து கொள்கிறோம். அது வரை எங்களது வீடுகளை அகற்றக்கூடாது. இந்த பகுதியில் வசிப்பவர்கள் அனைவரும் கூலித் தொழிலாளர்கள்.
எங்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே உடனடியாக மாற்று இடம் வழங்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago