பண்ருட்டி வி.ஆண்டிகுப்பம் பகுதியில் - மனிதக்கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க எதிர்ப்பு :

By செய்திப்பிரிவு

மனிதக் கழிவுகளை டேங்கர் லாரி மூலம் சில இடங்களில் புற நகர் பகுதியில் கொட்டுவதால் சுற்றுச்சூழல் சீர்கேடு அடைகிறது. இதை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுடன் மனிதக் கழிவுகளை சுத்திகரித்து, உரங்களை பெறும் வகையில் ஆலை அமைக்க பண்ருட்டி நகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதற்காக பண்ருட்டி அருகே உள்ள வி. ஆண்டிக்குப்பம் பகுதி யில் இடம் தேர்வு செய்யப்பட்டது. நேற்று அந்த இடத்தை பார்வையிட சென்ற அதிகாரிகளை கிராம மக்கள் சுற்றி வளைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆலை அமைந்தால் தங்கள் பகுதி நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்று கூறி, தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா, வட்டாட்சியர் பிரகாஷ், நகராட்சி ஆணையர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தைக்கு நடுவே கிராம மக்கள் திடீரென ஆண்டி குப்பம் - கணிசப்பாக்கம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் அனைவரும் கலைந்து சென் றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்