தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் - 82 கடைகளில் 17 மட்டும் ஏலம் :

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலை யத்தில் உள்ள கடைகளுக்கான பொது ஏலம் மாநகராட்சி அலு வலகத்தில் நேற்று நடைபெற்றது.

மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் முன்னிலையில் செயற்பொறியாளர் ஜெகதீசன், மேலாளர் கிளமென்ட், உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேக ரன் மற்றும் மாநகராட்சி அதிகாரி கள் கடைகளை ஏலம் விட்டனர். இதையொட்டி, போலீஸார் பாது காப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

புதிய பேருந்து நிலைய பகுதியில் மொத்தம் 122 கடைகள் உள்ளன. இதில், 40 கடைகளைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், மீதியுள்ள 82 கடைகளுக்கு நேற்று ஏலம் விடப்பட்டது. இவற்றில், 17 கடைகள் மட்டுமே ஏலம்போயின. இதில், அதிகபட்சமாக ஒரு கடை ரூ.96 ஆயிரத்துக்கும், குறைந்த பட்சம் ரூ.11 ஆயிரத்துக்கும் ஏலம் போனது.

இவற்றுக்கு முன்பு முறையே ரூ.25 ஆயிரம், ரூ.3 ஆயிரம் வாடகையாக செலுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ஏலம் கேட்காத மற்றும் குறைந்த வாடகைக்கு கேட்கப் பட்ட மீதியுள்ள 65 கடைக ளுக்கு பின்னர் தேதி அறிவிக் கப்படும் எனக் கூறி ஏலம் தள்ளி வைக்கப்பட்டது. ஏலமிடப்பட்ட கடைகள் மூலம் வைப்புத் தொகை, வாடகை என ரூ.1 கோடியே 30 லட்சம் வருமானம் கிடைத்தது. தற்போது ஏலமிடப்பட்ட 17 கடைகள் மூலம் மாநகராட்சிக்கு முன்பு ஆண்டுக்கு ரூ.13 லட்சம் வருமானம் கிடைத்தது. தற்போது, இது ரூ.59 லட்சமாக உயர்ந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்