வாழை, வெண்டை, மிளகாய், பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம் :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கி.செந்தில் ராஜ் அறிக்கை:

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சாத்தான்குளம், வைகுண்டம், ஆழ்வார்திருநகரி, திருச்செந்தூர், கருங்குளம், உடன்குடி, ஓட்டப்பிடாரம், கயத்தாறு, தூத்துக்குடி வட்டாரங்களில் வாழை பயிருக்கும், கயத்தாறு வட்டாரத்தில் வெண்டைப் பயிருக்கும், கயத்தாறு மற்றும் ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் மிளகாய் பயிருக்கும், கருங்குளம், ஓட்டப்பிடாரம் மற்றும் கயத்தாறு வட்டாரங்களில் வெங்காயம் பயிருக்கும் பயிர் காப்பீடு திட்டம் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் வங்கிகளில் கடன்பெறும் விவசாயிகள் அவர்களின் விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம். கடன்பெறா விவசாயிகள் காப்பீட்டு நிறுவனத்தின் (இப்கோ டோக்யோ) அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ வங்கிகள் / தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ பதிவு செய்துகொள்ளலாம்.

வாழை பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி நாள் செப்டம்பர் 15. வெண்டை, வெங்காயம், மிளகாய்பயிர்களுக்கு காப்பீடு செய்ய கடைசி நாள் ஆகஸ்ட் 31. வாழை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.3,210, வெண்டை பயிருக்கு ரூ.805, வெங்காயம் பயிருக்கு ரூ.982.51, மிளகாய் பயிருக்கு ரூ.841.25 காப்பீட்டு கட்டணமாக செலுத்த வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்