நீலகிரி அஞ்சலக கண்காணிப்பாளர் ராகவேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திய அஞ்சல் துறை வழங்கிவரும் சேவைகளில், சர்வதேச தபால் சேவையும் ஒன்று. இதன்கீழ், விரைவுதபால், சர்வதேச பதிவு பார்சல், சர்வதேச பதிவு அஞ்சல், ஐ.டி.பி.எஸ்., ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன. கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்படுவதாக அஞ்சல் இயக்குநர் அலுவலகம் அறிவித்துள்ளது. விரைவு அஞ்சல் 67 நாடுகளுக்கும், சர்வதேச பதிவு பார்சல்101 நாடுகளுக்கும், சர்வேதேச பதிவு அஞ்சல் 99 நாடுகளுக்கும், ஐ.டி.பி.எஸ். சேவை 14 நாடுகளுக்கும் அனுப்பலாம். இந்திய அஞ்சல் துறை வழங்கும் சர்வதேச சேவைகளை பயன்படுத்தி வெளிநாட்டில் இருப்பவர்களுக்குமளிகைபொருட்கள், மருந்துகள், ஆவணங்கள் மற்றும்ஆடைகளையும் அனுப்ப முடியும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சல் நிலையங்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago