கொளவாய் ஏரி ரூ.60 கோடியில் புனரமைப்பு : செங்கல்பட்டு ஆட்சியர் பணிகளை ஆய்வு செய்தார்

செங்கல்பட்டில் உள்ள கொளவாய் ஏரியில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் பூங்காக்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களுடன் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியை ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

கொளவாய் ஏரியில் படகு குழுமம், பூங்கா, அருவி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் ஏரி தூர்வாரி புனரமைக்கப்பட்ட பின்பு ஏரியில் தேங்கும் தண்ணீரை சென்னை குடிநீருக்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏரிக்கரையை சுற்றிலும் பொதுமக்கள் நடைபயிற்சி செய்யும் வசதியும் ஏரியில் 3 இடங்களில் தீவு அமைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் பூங்காவும் அமைக்கப்பட உள்ளன.

மேலும், ஏரிக்கரையை ஒட்டியுள்ள 16-ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட கோட்டையை சீரமைக்கவும் சுற்றியுள்ள அகழிகளை பழைய நிலைக்கு மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் கடந்த சில மாதங்கள் முன்பு தொடங்கி, தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்தப் புனரமைப்பு பணிகளை செங்கை ஆட்சியர் ராகுல் நாத் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் செங்கல்பட்டு நகராட்சியில் இருந்து கழிவுநீர் ஏரியில் கலப்பதை தடுக்க விரைந்து சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் எனவும் நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது நீர்வள ஆதார துறை உதவி செயற்பொறியாளர் வெங்கடேஷ், உதவி பொறியாளர் டி.குஜராஜ், நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்