சித்தூர்- தச்சூர் சாலை திட்டத்தை எதிர்த்து : செப். 7-ல் உண்ணாவிரதம் நடத்த முடிவு :

By செய்திப்பிரிவு

இவ்விழாக்களில், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் பங்கேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணி, கொசஸ்தலை ஆறுகளின் பாசன முறைகளை உள்ளடக்கிய மிகப் பெரிய விவசாய பகுதி ஊத்துக்கோட்டை. இப்பகுதியில் பேரழிவை ஏற்படுத்தக் கூடிய வகையில், சித்தூர் முதல் தச்சூர் வரையான பெங்களூரு- சென்னை அதிவேக நெடுஞ்சாலை (6 வழிச்சாலை) அமைக்க நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கி உள்ளது. இத்திட்டத்தால், 50 ஆயிரம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஆகவே, விவசாய நிலங்களை பாதிக்காத வகையில் இச்சாலை திட்டத்தை மாற்று வழிகளில் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தியும், கொசஸ்தலை, ஆரணி ஆறுகளில் மணல் குவாரி அமைக்க அனுமதிக்க கூடாது எனக் கோரியும், திருவள்ளூர் மாவட்டத்தில் போதிய நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்கக் கோரியும் வரும் செப்டம்பர் 7-ம் தேதி ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்