கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத்தொகை ரூ.1,800 கோடி : மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க சங்கத்தினர் கோரிக்கை

By செய்திப்பிரிவு

தமிழக கரும்பு விவசாயிகளுக்கு சேர வேண்டிய ரூ. 1,800 கோடி யைத் தர மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரும்பு விவசாயி கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத் துள்ளனர்.

தென் இந்திய கரும்பு விவசாயி கள் சங்கத்தின் (தமிழ்நாடு) நிர்வாககுழு, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நேற்று விழுப்புரத்தில் நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் ராஜ் குமார், பொதுச் செயலாளர் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் செல்லமுத்து, நிர்வாகிகள் கங்காதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தும் வகையில் இக்கூட் டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்கள் வருமாறு:

மத்திய அரசு வேளாண் சட்டங் களை திரும்ப பெற வேண்டும். தமிழக கரும்பு விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிலுவைத்தொகை ரூ.1,800 கோடியை மத்திய, மாநில அரசுகள் ஆலைகளுக்கு கடனாக வழங்கி, விவசாயிகளுக்கு வழங் கிட வழிவகை செய்ய வேண்டும்.

60 வயதுடைய விவசாயிக ளுக்கு மாத ஓய்வூதியம் ரூ 5 ஆயிரம் வழங்கிட வேண்டும். விவசாயிகள் பயனடையும் வகையில் காப்பீட்டுக் கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும்.

கரும்பு உற்பத்தி ஊக்கத் தொகையாக ரூ 3 ஆயிரம் வழங்க வேண்டும். கரும்பு பயிரிட ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 1 லட்சம் வங்கிகளில் கடன் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்று இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் செல்லமுத்து, “விவசாயம் உள்ளிட்ட அனைத்து வகையான தொழில்களையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கி, மத்திய அரசு முதலா ளித்துவத்தை வளர்த்து வருகிறது கன்னியாகுமரியில் வரும் அக்டோபர் 2-ம் தேதி உழவர்களின் சுதந்திர யாத்திரையை தொடங்க இருக்கிறோம்.

இந்த யாத்திரை ஜம்மு காஷ்மீர் வரை சென்று நவம்பர் 26-ம் தேதி அன்று டில்லி சென்றடையும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்