ஊரகப் பகுதி குடிநீர் தொட்டியிலிருந்து - மிகுதியாக வெளியேறும் தண்ணீரை மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்றுங்கள் : கள்ளக்குறிச்சி ஆட்சியர் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கரா புரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடசெட்டியந்தல், ராமராஜபுரம், பழையனூர் மற்றும் வரகூர் ஊராட் சிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் நேற்று பார்வையிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

சங்கராபுரம் ஒன்றியம் வடசெட்டியந்தல் ஊராட்சியில் பசுமை வீடு மற்றும் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும்தொகுப்பு வீடு கட்டுமானப் பணிக ளின் முன்னேற்றம், ராமராஜபுரம் ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் 316 தனிநபர் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ள பணிகள் குறித்தும், மேல்நிலை நீர்த் தேக்கத்தொட்டி கட்டுமானப் பணிகள், பழையனூர் ஊராட்சியில் ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.8.24 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலை மற்றும் அதனுடன் இணைந்த கழிவுநீர் வாய்க்கால் கட்டுமானப் பணிகள் தொடர்பாக வும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

ஊரகப் பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து மிகுதியாக வெளியேறும் தண் ணீரை மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பின் வாயிலாக சேமிக்குமாறும், இம்முறையை அனைத்து ஊராட்சிகளும் பின் பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து பகுதிகளுக்கும் முறையான குடிநீர் விநியோகம் செய்திடவும், ஏதேனும் விடுபட்ட வீடுகள் இருப்பின் அவ்வீடு களுக்கு குடிநீர் வழங்க சம்பந் தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவு றுத்தப்பட்டன என்றார்.

ஆய்வின்போது சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், செல்லதுரை மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்